மொத்தமாக காலியான சென்னை - கோயம்பேட்டில் நிலைமை தலைகீழ்

Update: 2025-01-12 08:33 GMT

தொடர் விடுமுறை காரணமாக கரும்பு, மஞ்சள் கொத்து மற்றும் இஞ்சி கொத்து விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் பொங்கல் சிறப்புச் சந்தைக்கு 250 லாரிகளில் கரும்பு வந்துள்ளது. அதேபோல் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்துக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இருந்த போதிலும் தொடர் விடுமுறை காரணமாக பொங்கல் சிறப்பு சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு சென்றதால் விற்பனை சரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்