சங்கரன் கோவில் அருகே ரவுடியை விசாரணை செய்ய சென்ற காவலரை அறிவாளால் வெட்டி தப்பி ஓடிய ரவுடி லெனின் என்பவரை பனவடலிசத்திரம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
சங்கரன்கோவில் அருகே காவலர் மாரிராஜா என்பவரை ரவுடி அறிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அருகே உள்ள பணவடலிசத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கருத்தானூர் பகுதியைச் சேர்ந்த குற்ற சரித்திர பதிவேடு குற்றவாளி லெனின் என்பவரை அவரது இருப்பிடம் சென்று விசாரணை செய்வதற்காக சென்ற காவலர் மாரி ராஜா என்பவரை ரவுடி லெனின் மறைத்து வைத்திருந்த அரிவாள் கொண்டு கை, வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டி விட்டு காவலரை கீழே தள்ளிவிட்டு ரவுடி தப்பி ஓடி விட்டார்.
இதில் பலத்த காயமடைந்த காவலர் மாரிராஜா சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...
ரவுடியை விசாரணை செய்யச் சென்ற இடத்தில் காவலரை வெட்டிவிட்டு ரவுடி தப்பி ஓடிய சம்பவம் சங்கரன்கோவில் பகுதி காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது...