பஸ் ஸ்டாண்டில் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் பச்சிளம் குழந்தையை கொடுத்து விட்டு ஓடிய இளம் பெண்
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ராமநத்தத்தில் பேருந்தில் பக்கத்தில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் பச்சிளம் ஆண் குழந்தையை கொடுத்து விட்டு இளம் பெண் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்வதி என்ற பெண்ணிடம் இருந்த அந்த பச்சிளம் குழந்தை போலீசார் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது . பின்னர் அந்த குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பச்சிளம் குழந்தையை கொடுத்து விட்டு இளம்பெண் தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.