மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்காக சின்ன உடைப்பு கிராம மக்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பதிலாக மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தர உத்தரவிடக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியே கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக வருவாய்த் துறையின் முதன்மைச் செயலர், நில நிர்வாகப் பிரிவின் இயக்குனர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 19ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அதுவரை அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர்.