``பெண்ணுக்கே தெரிவிக்காமல் பொருத்தப்பட்ட கருத்தடை கருவி.. அதன்பின் விபரீதம்'' - உறவினர்கள் புகார்

Update: 2025-01-04 06:11 GMT

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு தெரிவிக்காமல் அவருக்கு கருத்தடை சாதனம் பொருத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நெல்லை டவுன் சாலியர் தெருவை சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கும் திருமணம் முடிந்து, கர்ப்பமாக இருந்த கார்த்திகா பிரசவத்திற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு கடந்த நவம்பர் 25-ஆம் தேதி, ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, அந்த மருத்துவமனையில் அவருக்கு தெரிவிக்காமல் கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார்த்திகாவுக்கு உடல் உபாதை ஏற்பட்டு மீண்டும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளித்து, அவசரமாக டிஸ்சார்ஜ் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கருத்தடை சாதனத்தை முறையாக பொருத்தாததுதான் கார்த்திகாவின் உடல்நலக்குறைவுக்கு காரணம் எனக் கூறி, அவருடைய உறவினர்கள், நெல்லை மாவட்ட பொது சுகாதாரப் பணி இணை இயக்குனரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்