தி.மலை கோயிலில் வேலை பார்த்த தூய்மை பணியாளர்களுக்காக கலெக்டர் செய்த நெகிழ்ச்சி செயல்

Update: 2024-12-17 14:32 GMT

கார்த்திகை தீபத் திருநாளில், திருவண்ணாமலை கிரிவல பாதை மற்றும் கோயில் பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், தூய்மை பணியில் ஈடுபட்டனர். இவர்களை கெளரவப்படுத்தும் விதிமாக, திருவண்ணாமலை ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், அவர்களை அழைத்து சென்று சிறப்பு தரிசனத்தில் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வைத்தார். திருக்கோயில் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டு, தூய்மை பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் உள்ளிட்டவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்