குடி போதையில் செய்த அட்டூழியம்.. நள்ளிரவில் சிதறிய வீடு ..பரபரப்பு காட்சி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாக்கினாம்பட்டி பகுதியில் தாறுமாறாக வந்த கார், மின்கம்பத்தில் மோதி வீட்டின் சுவரை முட்டி நின்றது. சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் காரில் இருந்த மூன்று போதை ஆசாமிகளை மீட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.