போலி ஆவணங்களை தாக்கல் செய்த முனிசிபாலிட்டி ஆஃபிஸர்.. ஐ-கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-03-02 13:22 GMT

போலி ஆவணங்களை தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வெண்ணந்தூர் பேரூராட்சி செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு விசாரித்தது. அப்போது நேரில் ஆஜரான செயல் அலுவலர் யசோதா, போலியாக ஆவணங்கள் போலியாக தயாரித்த‌தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரினார். இதையடுத்து, பேரூராட்சி அலுவலர் உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 2 மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதுவரை செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்து, காவல்துறையில் புகார் அளிக்கவும் உத்தரவிட்டனர். 2 மாதங்களில் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், முறையீட்டு வழக்குகளை 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்தனர். அபராதத் தொகையை வழக்கு தொடர்ந்த 11 தூய்மைப் பணியாளர்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்