"வாட்ஸ் அப்பில் மிரட்டல்" பிரபல கல்லூரியை சுற்றும் `மதம்' - மாணவிகளின் போராட்டத்தால் பரபரப்பு

Update: 2024-11-12 14:22 GMT

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியானது இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு

மதரீதியான பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்றதாகவும் இதனை பலமுறை மாணவர்கள் புகார் அளித்தும் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகளை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள் கலந்து கொள்ளும் இந்துத்துவ ஆன்மீக சொற்பொழிவில் கலந்து கொள்ளும்படி மாணவிகளை கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தி வரவழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்திய மாணவர் சங்கங்களை சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

மேலும் கல்லூரி நிர்வாகம் மாணவிகள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் இந்த ஆன்மீக சொற்பொழிவு விழாவில் கலந்துகொள்ள மறுக்கும் மாணவிகளின் மதிப்பெண் பட்டியல் வெளியிட சிரமம் உண்டாகும் எனவும். தவறாமல் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும், அப்படி இந்த சொற்பொழிவு விழா முடிய காலதாமதம் ஆகும் நிலையில் மாணவிகள் தங்களது பெற்றோர்களை வரவழைத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்து மாணவிகள் இதில் பங்கேற்கவில்லை என்றால் நாளை பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மாணவியர்களை கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தும் whatsapp ஆடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்