தமிழ்நாட்டில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், 4 இடங்களில் சதமடித்தது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாத மைய பகுதியில் இருந்து, வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய, ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை தொட்டது. தினந்தோறும் 20 இடங்களுக்கு குறைவில்லாமல் வெயில் சதமடித்து வந்தது.
இந்நிலையில் இம்மாதம் நான்காம் தேதி முதல், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள், மற்றும் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் கோடை வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று, சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், திருத்தணி உள்ளிட்ட 4 இடங்களில் வெயில் சதமடித்தது.