கணவருடன் சண்டையிட்டு தோழி வீட்டில் நகையை வைத்த பெண்ணுக்கு அதிர்ச்சி...

Update: 2024-12-12 04:23 GMT

சென்னை ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பக்ருநிஷா பேகம் இவரது கணவர் துணிக்கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில தினங்களுக்கு முன் கோபித்துக் கொண்டு அருகே உள்ள தனது தோழி ராசாத்தி வீட்டில் தங்கி இருக்கிறார். அப்போது அவர் கொண்டு வந்த 70 சவரன் நகை மற்றும் 4 லட்சம் பணம் ஆகியவை காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். இது குறித்து பக்ருநிஷா பேகம் ராசாத்தியிடம் கேட்ட போது ராசாத்தி அது பற்றி தனக்குத் தெரியாது எனக் கூறி இருக்கிறார்.இந்த நிலையில் கணவர் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து தனது வீட்டிற்குச் சென்ற பக்ருநிஷா கணவரிடம் நடந்த சம்பவத்தைக் கூறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பக்ருநிஷா பேகம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்