அப்படியே அந்த பக்கம் ஷிப்ட்டான பெருங்களத்தூர் பரிதாபங்கள் - கதறும் சென்னைவாசிகள்

Update: 2024-09-14 02:47 GMT

தொடர் விடுமுறை காரணமாக சென்னை மற்றும் புறநகரில் இருந்து தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றதால், செங்கல்பட்டு அருகே ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நள்ளிரவு ஒரு‌ மணிக்கும் பரனூர் சுங்கசாவடியில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மகேந்திராசிட்டி, முதல் பரனூர் சுங்கசாவடி, புலிப்பாக்கம் என சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்க்கும் மேலாக இந்த போக்குவரத்து நெரிசல் நீடித்தது. பரனூர் சுங்கச் சாவடியில் கூடுதல் கவுன்டர் திறந்து, வாகனங்களை அனுப்பி வைத்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்