மின்னல் வேகத்தில் மோதிய கார்.. சுக்குநூறாக உடைந்த பைக் ..சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-12-08 02:58 GMT

ரெட்டேரி பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர், பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டம் படித்து வருகிறார்.

அவர் அண்ணா நகரில் உள்ள டவர் பூங்காவிற்கு தனது தோழியுடன் காரில் வந்துள்ளார். அவர்கள்

காரில் அமர்ந்திருந்த போது அவ்வழியாக வந்த போலீசார், கதவை தட்டியதால் பதட்டம் அடைந்த மாணவர், உடனடியாக காரை இயக்கியுள்ளார். எதிர்பாராத விதமாக அதிவேகமாக காரை இயக்கியதால், அந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின்யோரம் இருந்த நான்கு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்துள்ளது.

அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து, காரில் இருந்த இருவரையும் பாதுகாப்பாக மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்