100 ஆண்டுகள் பழமையான கடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ஆதங்கத்தை கொட்டிய வாடிக்கையாளர்
சென்னையில் பிரபல கேக் நிறுவனத்தில் கெட்டுப்போன பிறந்தநாள் கேக் விற்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூரை சேர்ந்த தினேஷ் என்பவர் உணவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். அதில் பிரபல கேக் நிறுவனத்தில் வாங்கிய பிறந்தநாள் கேக் கெட்டு போயிருந்ததாகவும், குப்பையில் போட வேண்டிய கேக் தவறுதலாக விற்கப்பட்டதாக, விற்பனையாளர்கள் அலட்சியமாக பதிலளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மற்ற உணவுப்பொருட்களை போலவே கேக்கிற்கும், காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும் என்றும் தினேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.