"நானும் மருத்துவர் தான்.." வான்டடாக வந்து மாட்டிய போலி டாக்டர் - கடைசியில் தான் ட்விஸ்ட்டே

Update: 2024-12-30 11:14 GMT

பாலூர் கிராமத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனின் மூதாட்டியிடம் ஒருவர் பேச்சுக்கொடுத்துள்ளார். அப்போது, சிறுவனுக்கு சளி பிடித்திருப்பதாக மூதாட்டி கூறியுள்ளார். உடனே அந்த நபர், நானும் மருத்துவர் தான் எனக் கூறி சிறுவனை பரிசோதித்து ஊசி போட்டுள்ளார். இதை கவனித்த இளைஞர்கள், சந்தேகப்பட்டு முதியவரை பிடித்து விசாரித்தனர். அதில், காஞ்சிபுரத்தை சேர்ந்த போலி மருத்துவர் பெரோஸ் கான், பல்வேறு கிராமங்களுக்கு சென்று மருத்துவம் பார்த்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மலர்விழி, போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலி மருத்துவர் பெரோஸ் கான் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்