"எங்க வந்து யாருகிட்ட?" - பிரியாணி போட்டியில் கதறவிட்ட இளம்பெண்கள் | Briyani | Namakkal

Update: 2025-01-10 02:49 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற பிரியாணி உண்ணும் போட்டியில், ஆண்கள், இளம்பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிரியாணியை வெளுத்து வாங்கினர்.

மோகனூரில் உள்ள பிரபல பிரியாணி உணவகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நுழைவு கட்டணமாக 150 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில் ஆண்கள் பிரிவில் இரண்டரை கிலோ பிரியாணியை மின்னல் வேகத்தில் சாப்பிட்டு காண்போரை கதிகலங்க செய்த சின்ன முதலைப்பட்டியைச் சேர்ந்த பிரபு, 5 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை தட்டிச்சென்றார். நாங்கள் மட்டும் என்ன தக்காளி தொக்கா? என பெண்கள் பிரிவில் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கிய நாமக்கல் அன்பு நகரை சேர்ந்த நித்யா, ஒன்றரை கிலோ பிரியாணியை சாப்பிட்டு முதலிடம் பிடித்தார். அவருக்கு 2 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதேபோல் போட்டி நடத்தியவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், பலரும் பிரியாணியை ரசித்து ருசித்து அதகளப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்