குளிக்க சென்ற பெண் - சேலை கட்டி வந்த மர்மநபர்கள் - பாத்ரூம் வாசலில் நின்று செய்த பயங்கரம்

Update: 2025-01-10 08:40 GMT

நைனாபட்டி கிராமத்தை சேர்ந்த ராதா என்பவரின் கணவர் சுப்பிரமணியன் மற்றும் மாமனார் வேலைக்காக வெளியில் சென்று விட்டனர். அவரது மாமியார் மாரிகண்ணு கடைக்கு சென்று இருந்தார். வீட்டில் தனியாக ராதா, கதவை பூட்டிவிட்டு உள்ளே குளிக்க சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்த இரண்டு பேர், பெண்களைப் போல் சேலையை சுற்றிக்கொண்டு குளியலறை கதவின் அருகே நின்று உள்ளனர். ராதா குளித்துவிட்டு கதவை திறந்த உடன் அவரது தலையில் உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு கட்டி போட்டுள்ளனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த தாலி செயின், மற்றும் பீரோவில் இருந்த 30 சவரன்

நகைகளை திருடிச் சென்று விட்டனர். கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாமியார் மாரிகண்ணு, மருமகளை தாக்கி வீட்டில் கொள்ளை நடந்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே காயம் அடைந்த ராதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்