பீப் பிரியாணி விற்பனைக்கு மிரட்டல் "அதுல நம்ம தலையிட முடியாது" - பாஜக நிர்வாகி விளக்கம் | BJP

Update: 2025-01-09 02:30 GMT

கோவையில் பீப் பிரியாணி கடை நடத்தக்கூடாது என தம்பதிகளை மிரட்டியதாக கூறப்பட்ட விவகாரத்தில், பாஜக நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார். உடையாம்பாளையத்தை சேர்ந்த ரவி, அபிதா தம்பதியினர், தள்ளுவண்டியில் பீப் பிரியாணி விற்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரமணி என்ற பாஜக நிர்வாகி, தம்பதிகளுடன் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. போலீசார் சம்பந்தப்பட்ட தம்பதிகளிடம் நேரில் விசாரணை நடத்தினர். கோவில் இருப்பதாலும், ஊரின் கட்டுப்பாடு காரணமாகவும் இறைச்சி கடை வைக்க வேண்டாம் என கூறியதாக பாஜக நிர்வாகி சுப்ரமணி விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்