அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குடியிருக்கும் வீடு, அவருடைய சொத்தாக கருத முடியாது என, அறிக்கையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோட்டூர் மண்டபம் தெருவில் உள்ள வீடு, கோவில் நிலத்தில் உள்ளதால், ஞானசேகரின் சொத்தாக அதை கருத முடியாது எனவும், வீட்டின் ஒரு பகுதி கோவில் நிலத்திலும், நுழைவாயில் போன்றவை மாநகராட்சி நிலத்திலும் இருப்பதாகவும் வருவாய் துறை அதிகாரிகள் அறிக்கையாக தயாரித்து சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் சமர்ப்பித்துள்ளனர்.