அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த கே.பி முனுசாமி திடீரென ஆவேசமடைந்து, கைது செய்து கொள்ளுங்கள் என கூறியதால், அங்கிருந்த அ.தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பினர். இதன்பின்னர் கே.பி. முனுசாமி உட்பட 250க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.