புதுக்கோட்டை அருகே நர்சிங் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், வதந்திகளை பரப்பினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, குற்றவாளி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாணவி கிணற்றில் விழுந்து இறந்தது தொடர்பாக உடனடியாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அவரது உடலில் உள் காயமோ வெளிக்காயமோ எதுவும் இல்லை என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக பரவிய தகவல் தவறானது என்றும், இதுபோன்ற வதந்திகளை பரப்பினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, மாணவியின் உடலை பெற உறவினர்கள் மறுத்துவிட்டனர்.