ராம்நாட்டில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர் - ஈபிஎஸ், அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம் | Ramanathapuram
பெண்களின் படிப்பை நிறுத்தப் பார்ப்பதாகக் கூறி அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து பரமக்குடி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ஈபிஎஸ் மற்றும் அண்ணாமலை கல்லூரி மாணவிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டி கண்டன வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன... தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் மாணவியர் பிரிவு சார்பில் பரமக்குடி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.