ஏக்கர் கணக்கில் சேதமான பயிர்கள்...மக்கள் வைக்கும் ஒற்றை கோரிக்கை

Update: 2024-12-18 05:59 GMT

ஏக்கர் கணக்கில் சேதமான பயிர்கள்...மக்கள் வைக்கும் ஒற்றை கோரிக்கை

தஞ்சையில், சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். புலவன் காடு சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் மழைநீரில் சாய்ந்து அழுகத் தொடங்கியுள்ளதாக கூறிய விவசாயிகள், ஏக்கருக்கு 25 முதல் 35 ஆயிரம் வரை செலவு செய்ததாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதாது என தெரிவித்துள்ள விவசாயிகள், ஏக்கருக்கு 35 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்