எதற்கும் துணிந்து மோதும் அமைச்சர் அன்பில் மகேஷ்

Update: 2024-09-11 02:39 GMT

எஸ்.எஸ்.ஏ. நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பது, கல்வி மீது மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளை நசுக்கும் செயல் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

மத்திய அரசு நிதியை தர மறுப்பதை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவுக்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தாய் மொழியில் கல்வி கற்பதை தமிழக முதல்வர் விரும்பவில்லையா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு, அமைச்சர் அன்பில் மகேஷ், எக்ஸ் தள பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், மத்திய அரசு பணிகளில் சமவாய்ப்பை உறுதிப்படுத்திடும் வகையில் போட்டி தேர்வுகளை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என பலமுறை முதலமைச்சர் கோரிக்கை விடுத்தும், மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல தொழில்நுட்ப பாடங்களை ஏற்கனவே தமிழ் மொழியில் தமிழகம் மொழிபெயர்த்து வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணும் எழுத்தும், புதுமைப்பெண், இல்லம் தேடிக் கல்வி, தமிழ் புதல்வன் என புதிய கல்விக் கொள்கையுடன் ஒத்துப் போகும் பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

எஸ்.எஸ்.ஏ. நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பது கல்வி மீது மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளை நசுக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ள அவர், நிறுத்தப்பட்டுள்ள எஸ்.எஸ்.ஏ. நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்