புதிய வகை ஆவின் பால் பாக்கெட் அறிமுகம்.. பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்! | Aavin Milk

Update: 2024-12-15 02:29 GMT

ஆவின் நிறுவனம் கிரீன் மேஜக் பிளஸ் என்ற புதிய வகையான பால் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்ப, அவப்பொழுது புது வகையான பால் மற்றும் பால் பொருட்கள் ஆராய்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆவின் பால் விற்பனை அனைத்து நகர வெளிப்புறப் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் வகையில், சுமார் 2 லட்சம் லிட்டர் பால் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

சில்லறை விற்பனையாளர்களின் குளிர்சாதன செலவினங்களை கருத்தில் கொண்டுள்ளதாகவும்,

தற்பொழுது குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இடையே வைட்டமின் ஏ மற்றும் டி சத்து குறைபாடு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்றவாறு 4.5 கொழுப்பு சத்து மற்றும் 9 % இதர சத்துக்களுடன் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகையான பால்,

சில்லறை விற்பனையாளர்களுக்கு சற்று அதிக கமிஷனுடன், சில ஒன்றியங்களில் மட்டும் குறைந்த அளவில் உற்பத்தி செய்து, அதனுடைய சந்தையை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது

சில்லறை தட்டுப்பாடு காரணமாக, 450 ml ரூபாய் 25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவையும் குறைக்கவில்லை என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்