``விடைபெறுகிறேன்..'' நீண்ட நாள் காத்திருப்பு... கிடைக்காத வாய்ப்பு - ஓய்வை அறிவித்தார் வருண் ஆரோன்
இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளரான வருண் ஆரோன், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான ஜார்க்கண்டை சேர்ந்த வருண் ஆரோன், இந்தியாவுக்காக தலா 9 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அடிக்கடி காயமடைந்து அவதிப்பட்டு வந்த வருண் ஆரோனுக்கு, 2015ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த வருண் ஆரோன், இனி குடும்பத்துடன் நேரத்தை செலவிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.