``சாம்பியன்ஸ் டிராபி - ஆப்கனுடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது..'' | Champions Trophy

Update: 2025-01-10 11:44 GMT

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியை தென் ஆப்பிரிக்க அணி புறக்கணிக்க வேண்டும் என அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் கேட்டன் மெக்கன்ஸி (Gayton McKenzie) வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுடன் தென் ஆப்பிரிக்கா விளையாடக் கூடாது என அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்