டிஎன்பிஎல் தொடரில் நெல்லை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி வீழ்த்தியது. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய திருப்பூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 50 ரன்கள் சேர்த்தார். பின்னர் வெற்றிக்காக கடுமையாக போராடிய நெல்லை அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் குவித்து தோல்வியை தழுவியது.