சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் ஈட்டியெறிதலில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. எஃப்-37 (F-37) பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் ஹனே 55 புள்ளி 97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியெறிந்தார். இதன்மூலம் முதலிடம் பிடித்த ஹனே, தங்கப் பதக்கத்தையும் தன்வசப்படுத்தினார். ஹனே வீசிய தூரம், ஆசிய சாதனையாகவும் அமைந்தது.