RCB ரசிகர்களுக்கு - அம்பத்தி ராயுடு X தளத்தில் போட்ட பதிவு

Update: 2024-05-24 14:22 GMT

அணியின் நலனை முதன்மைப்படுத்தும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமென ஆர்சிபி நிர்வாகத்தை கட்டாயப்படுத்துமாறு, பெங்களூரு ரசிகர்களுக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடாமல், அணியின் நலனுக்காக நிர்வாகமும், கேப்டன்களும் யோசித்திருந்தால், ஆர்சிபி பல கோப்பைகளை வென்றிருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் பல சிறந்த வீரர்களை ஆர்சிபி நிர்வாகம் வெளியேற்றி விட்டதாகவும், அடுத்த மெகா ஏலத்தில் இருந்து ஆர்சிபி அணிக்கு புதிய வரலாறு தொடங்கட்டும் எனவும் அம்பத்தி ராயுடு பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்