பாரிஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டி - 4வது தங்கம் வென்றார் லியோன் மெர்ச்சன்ட்

Update: 2024-08-03 13:48 GMT

பாரிஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பிரான்ஸ் நீச்சல் வீரர் லியோன் மெர்ச்சன்ட் 4வது தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆடவர் 200 மீட்டர் மெட்லி பிரிவு நீச்சல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பந்தய தூரத்தை 1 நிமிடம் 54 வினாடிகளில் கடந்து பிரான்ஸ் வீரர் லியோன் மெர்ச்சன்ட் முதலிடம் பிடித்தார். ஒலிம்பிக் சாதனையாகவும் இது அமைந்த நிலையில் நடப்பு ஒலிம்பிக்கில் தனது 4வது தங்கப் பதக்கத்தையும் மெர்ச்சன்ட் முத்தமிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்