சென்னை டெஸ்ட் - நாளை டிக்கெட் விற்பனை

Update: 2024-09-19 00:44 GMT

இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கான நேரடி டிக்கெட் விற்பனை நாளை வியாழனன்று காலை 7 மணிக்கு தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. டெஸ்ட் போட்டி நடைபெறும் 5 நாட்களுக்கும் அன்றைய தினத்திற்கான டிக்கெட்டுகளை தினசரி காலை, கவுன்ட்டர்களில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்