18வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் kolkata knight riders அணியும்,, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு royal challengers bangalore அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கொல்கத்தா அணியை அஜிங்யா ரஹானேவும் AJINKYA RAHANE பெங்களூரு அணியை ரஜத் பட்டிதாரும் RAJAT PATIDHAR வழிநடத்தவுள்ளனர். இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் வரிசைகட்டி நிற்பதால் முதல் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மே 25ம் தேதி வரை நடைபெற உள்ள 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர், சுமார் 2 மாத காலத்திற்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளது.