தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முக்கியமான கட்டத்தில் அணிக்கு அவர் பங்களிப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழக வீரர்கள் அணியில் இடம்பெறுவார்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அணிக்கு சிறந்தது எது என்பதை தான் முதலில் பார்க்க வேண்டும், எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல என தெரிவித்தார்.