ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண வரும் பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக சென்னை சிங்கம் IPL QR-Code என்ற நவீன வசதியை சென்னை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் கிரிக்கெட் போட்டியை காணவரும் பார்வையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போலீசாருக்கு தெரிவிக்கலாம் எனவும், உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.