இத்தனை ஆண்டுகளில் தோனியை யாராவது கட்டுப்படுத்தியிருக்கிறார்களா என மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தது கவனம் பெற்றுள்ளது. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஹர்திக் பாண்டியா, பும்ரா இடத்தில் மாற்று வீரர்களை கொண்டு வருவது கடினம் என கூறினார். மேலும் கடந்த 11 ஆண்டுகளாக முதல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெறாமல் இருக்கும் நிலையை மாற்றுவோம் என தெரிவித்தார்.