இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குபெர்காவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹார்திக் பாண்டியா 39 ரன்களும், அக்சர் படேல் 27 ரன்களும் எடுத்தனர். பின்பு 125 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவும், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 88 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஸ்டப்ஸ் மற்றும் கோட்ஸி இணைந்து போராடி, 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கவை வெற்றி பெற வைத்தனர். சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் வெற்றிக்கு உதவவில்லை. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை, தென்னாப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.