வங்கதேசத்தை எளிதில் சாய்த்த இந்திய அணி

Update: 2024-09-22 13:46 GMT

சென்னை சேப்பாக்கம் டெஸ்ட்டில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதில் வீழ்த்தியது.

சேப்பாக்கம் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வினின் சதத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு 376 ரன்கள் குவித்தது. பின்னர் இந்திய வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல், வங்கதேசம் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 2வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட், சுப்மன் கில் அபார சதத்தால் இந்திய அணி 287 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ததால், வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 4ஆம் நாள் ஆட்டத்தில் ஷாகிப் அல் ஹசன் 25 ரன்களில் அஸ்வின் சுழலில் வீழ்ந்தார். இதன்பிறகு, சீட்டுக்கட்டு சரிவது போன்று வங்கதேசம் விக்கெட்டை பறிகொடுத்தது.

Tags:    

மேலும் செய்திகள்