சூடுபிடிக்கும் ஆட்டம்.. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டி20

Update: 2024-11-13 02:17 GMT

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி, சென்சூரியனில் புதன்கிழமை (இன்று) நடைபெறுகிறது. சென்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால், இந்த போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்