"உசுரு முக்கியம்.. நீங்க கொடுக்குறது எதுவும் வேணாம்" - புஸ்ஸி ஆனந்த்தை ரவுண்டு கட்டிய பெண்கள்
விழாவில் பங்கேற்ற தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு இலவச பொருட்கள் வழங்கினார். அப்பொழுது கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் புஸ்ஸி ஆனந்தை சுற்றி மேடையில் நின்றதால் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. இதனால் இலவச பொருட்களை வாங்க வந்த பெண்கள் கடும் அவதி அடைந்ததோடு வயதானவர்கள் டோக்கன்களை கையில் வைத்துக்கொண்டு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது . கூட்டத்தில் சிக்கிய வயதான பெண்கள் சிலர், பொருட்கள் வேண்டாம் உயிர் முக்கியம் என நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மேலும் மேடையில் கூட்டம் நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் தவெக பொதுச் செயலாளர் ஆனந்திடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.