சென்னை மாமன்ற கூட்டத்தில் அக்ரஹாரம் தொடர்பான விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பா.ஜ.க கவுன்சிலர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அக்ரஹாரம் செய்ய முடியாத பணி தூய்மை பணி என வி.சி.க கவுன்சிலர் கோபிநாத் விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க கவுன்சிலர் உமாநாத், அக்ரஹாரத்தை பார்த்து வயிற்று எரிச்சல் ஏற்பட்டால் ஜெலுசில் (Gelusil) அருந்துங்கள் என பதிலளித்தார்.