கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருப்பதாக, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை அருகே திமுக நிர்வாகியின் உறவினர் காளீஸ்வரன் வெட்டிக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக, நான்கு புள்ளி ஐந்து இரண்டு (4.52) படுகொலைகள் வீதம், திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6 ஆயிரத்து 597 படுகொலைகள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.