``எங்கு நின்றாலும் தோல்வி தான்..’’ - ஒரே போடாய் போட்ட செந்தில் பாலாஜி

Update: 2025-03-23 11:52 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அரவக்குறிச்சி மட்டுமல்ல வேறு எங்கு நின்றாலும் அவருக்கு தோல்வி கிடைக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் ஆகியவற்றைக் கண்டித்து, கரூர் பசுபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், எத்தனையோ தலைவர்கள் சமரசம் செய்து கொண்டு வாழ்ந்தாலும், ஆளுமை மிக்க தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அரவக்குறிச்சி மட்டுமல்ல, வேறு எங்கு நின்றாலும் அவருக்கு தோல்வி கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்