``இன்னும் முடியல..'' - சீமானுக்கு எதிராக ஆவேசமாக நடிகை வெளியிட்ட வீடியோ
சீமானுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என கூறியுள்ள நடிகை, இப்போது தான் போர் தொடங்கி இருப்பதாக ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகை வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், 14 வருடங்களாக தன்னை பாலியல் தொழிலாளி என கூறி வருவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். தன்னைப் பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.