`` டாஸ்மாக் ஊழல் அந்த நேரத்தில் பேசப்படும்..’’ - பரபரப்பை கிளப்பிய டிடிவி தினகரன்
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராமாபுரத்தில் நடைபெற்ற நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், விகிதாச்சார அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தினால் வடமாநிலங்களுக்கு கிடைப்பது போன்று தமிழகத்திற்கும் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை உயரும் என்று தெரிவித்தார். டாஸ்மாக் ஊழல், தேர்தல் நேரத்தில் பெரிதும் பேசப்படும் என்றும், அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.