எஸ்.ஐ மனைவிக்கு கொலை மிரட்டல் அதிமுக முக்கிய புள்ளியை - தட்டி தூக்கிய போலீஸ்
எஸ்.ஐ மனைவிக்கு கொலை மிரட்டல்
அதிமுக முக்கிய புள்ளியை
தட்டி தூக்கிய போலீஸ்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மறைந்த பெல் நிறுவன செக்யூரிட்டி எஸ்.ஐ மனைவியிடம் 30 லட்சம் பணம், நகை வாங்கி ஏமாற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்தை திரும்ப கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக எஸ்ஐ செல்குமாரின் மனைவி ரேகா துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், அ.தி.மு.கவின் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகி எம்.பி.ராஜா, சமுத்திர பிரகாஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.