தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் வேலை பார்த்தவர்...அவருக்கு தங்கள் வலிமை தெரியும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்த நிலையில், அதற்கு பதிலளித்து தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். அதில், காவல்துறை அதிகாரியாக கர்நாடக மக்களுக்கு விடாமுயற்சியுடன் தான் சேவை செய்ததாகவும், அதுகுறித்து
குறிப்பிட்டதற்கும், இந்த ஏழை மனிதரை வாழ்த்தியதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும், சித்தராமையாவை அவரது நாற்காலியில் இருந்து வீழ்த்தி, கர்நாடக முதல்வராக நினைக்கும் தங்கள் அயராத முயற்சிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.