"திருப்பதியில் இந்துக்களுக்கு மட்டுமே..." - முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். பிற மதத்தை சேர்ந்த யாரேனும் தற்போது பணியில் இருந்தால், அவர்கள் மாற்று இடத்தில் உடனடியாக பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஏழுமலை கோயில் சுற்று வட்டார பகுதிகளில் வணிக செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக கூறி உள்ளார்.