திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி

Update: 2025-03-22 05:11 GMT

திருப்பதி மலையில் இந்துக்களுக்கு மட்டும் பணிகள் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு தெரிவித்துள்ளார். திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னதான அறக்கட்டளைக்கு ஒரு நாள் செலவு தொகையாக 44 லட்ச ரூபாயை நன்கொடையாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். தன்னுடைய பேரன் தேவான்ஷ் பிறந்த நாட்களின் போது தங்களுடைய குலதெய்வமான ஏழுமலையானை வழிபடுவது வழக்கம் என்ற வகையில் ஏழுமலையானை குடும்பத்தினருடன் வழிபட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அன்னதானம் செய்வதன் மூலம் ஆத்ம்ச் திருப்தி ஏற்படுவதாகவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்