"கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளா?"- ஆ.ராசா பேச்சுக்கு கிளம்பிய எதிர்ப்பு

Update: 2025-01-09 02:52 GMT

கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள் என்று பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் நடந்த நிகழ்வில் பேசிய ஆ.ராசா, கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்டதால் கொள்கை தோற்றுப் போய் விட்டது என்று கூறியிருந்தார். அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.போகிற போக்கில் கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டும் ஆ.ராசா, அவர் கண்டறிந்த கம்யூனிஸ்டு சுயநலவாதிகள் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்